டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 17) இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று (மே 16) சோதனை நடத்தியது.
மேலும், விசாகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் இரவு அவர்களது இல்லத்தில் விடப்பட்டனர்.
இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாகன் வீட்டில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தொடர்ந்து விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ED conducts searches vishagan akash baskaran
அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது