கோவை மே 27 கோவை ராமநாதபுரம் சுங்கம் திருச்சி ரோட்டில்,கேக் பாயிண்ட் எதிர்புறம், வலது புறமாக திரும்பும் இடத்தில், “முதல் யூ டேர்ன் “உள்ளது.இதன் அருகே உள்ள “மேம்பாலத்தின் பெரிய தடுப்புச் சுவர் மறைப்பதால் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வரும் வாகனங்கள்,வலது புறம் திரும்புவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது.இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையருக்கு சுங்கம் ஆதித்யா அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் மக்கள் சார்பில் ஆதித்யாகுடியிருப்போர் நல சங்க தலைவர் ஆர். பி. கருணாகரன் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.அந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உடனடியாக அந்த இடத்தில் முதல் கட்டமாக தடுப்பு வேலி வைப்பதற்கு உத்தரவிட்டார்.இதை யடுத்து இன்று அந்த இடத்தில்பிரதிபலிப்பு “ஸ்டிக்கர் ” ஒட்டப்பட்ட தடுப்பு வேலி வைக்கப்பட்டுள்ளது.மாநகர காவல் ஆணையரின் உடனடி ஏற்பாட்டுக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாகவும், ஆதித்யா அப்பார்ட்மெண்ட்குடியிருப்போர் நலச்சங்கம் சார்பிலும், நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அபாய இடத்தில் உடனடியாக தடுப்பு வேலி அமைத்த போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்குபொதுமக்கள் பாராட்டு.
