கொலை குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஹரிகரன் (25)என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23)என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.. அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் .பவன்குமார் க.கிரியப்பனவர், மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளி நாகப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.