உக்ரைனைக்கு மீட்க சென்ற விமானம் பாதியில் திரும்பியது-உச்சக்கட்ட பீதியில் இந்தியர்கள்.!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பியது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக பாய்ந்து தாக்குவதால் அங்கு உச்சக்கட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது.

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.