தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு 10 கவுண்டர்கள் மூலம் தொடங்கிய இந்த மனு விநியோகத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டுக்கடங்காத அளவில் திரண்டனர். ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் அலைமோதியதால், ஒவ்வொரு கவுண்டரிலும் மனுக்களை வாங்க கடும் போட்டி நிலவியது.
மனு விநியோகம் தொடங்கிய வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே, அதாவது பிற்பகல் 2.30 மணிக்குள் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்ததை விட மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு மனுக்கள் காலியானதால், தவெக-வின் செல்வாக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் மீதான ஆர்வம் இந்த அளவுக்கு இருக்கிறதா எனப் பலரும் வியந்து பேசி வருகின்றனர்.









