இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) ஆகிய இரண்டும் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ரேடார் ஆண்டெனாவை பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளன.
இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரண்டும் கூட்டு சேர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிசார் மிஷனின் (NISAR Mission) ஒரு பகுதியாக 33 அடி ஆண்டெனா ஒன்று, பூமியின் மேற்பரப்பை “இதற்கும் முன் எதுவுமே இப்படி விரிவாக படம்பிடிருக்க முடியாதபடி” வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பூமி கிரகத்தில் இருந்து சுமார் 460 மைல்கள் உயரத்தில் சுற்றும் இஸ்ரோ மற்றும் நாசாவின் நிசார் மிஷன் ஆனது மேகங்களை ஊடுருவி (இரவு, பகல் ஆகிய இரண்டு நிலைகளிலும்) செயல்படக்கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் படங்களை (high-resolution radar images that can penetrate clouds) வழங்கும்.
இதன் மூலம் காலநிலை மாற்றம், இயற்கையால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விவசாய போக்குகள் குறித்த முக்கியமான தரவுகள் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பேரிடர் உதவி குழுக்களுக்கு கிடைக்கும். இந்த மைல்கல் – பூமி கண்காணிப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் மேம்பட்ட பொறியியளுக்கு லுக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) மற்றும் இஸ்ரோ ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்படும் நிசார் செயற்கைக்கோளில் இரட்டை அதிர்வெண் எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் சிந்தெடிக் அபெர்க்ஷர் ரேடார் (Synthetic aperture radar) பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கண்காணிக்க அனுமதிக்கிறது.
வானிலை அல்லது ஒளி நிலைமைகளால் வரையறுக்கப்பட்ட ஆப்டிகல் செயற்கைக்கோள்களை போலல்லாமல், நிசார் செயற்கைகோள் ஆனது தொடர்ச்சியான, நம்பகமான தரவை வழங்குகிறது, இது பனிப்பாறைகள், காடுகள், நில அதிர்வு செயல்பாடு மற்றும் விவசாய நிலங்களை கண்காணிப்பதற்கான ஒரு கேம்-சேஞ்சராக அமைகிறது.
இந்த தொழில்நுட்பம் நாடுகள் பேரழிவுகளுக்குத் தயாராகும் விதத்திலும் வளங்களை நிர்வகிக்கும் விதத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாசா நம்புகிறது. நாசாவின் எர்த் சயின்ஸ் மிஷனில், இதுவரை பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆண்டெனாவான 33-அடி ஆண்டெனாவானது – நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனமான ஆஸ்ட்ரோ ஏரோஸ்பேஸால் உருவாக்கப்பட்டது.
ஏவப்படும்போது சிறியதாக இருந்த இந்த ஆன்டெனா, சுற்றுப்பாதைக்கு சென்றபின்னர் முழு குடை போன்ற அதன் உண்மையான வடிவத்திற்கு விரிவடைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சிந்தெடிக் அபெர்க்ஷர் ரேடார் ஆனது ஒரு சக்திவாய்ந்த கேமரா லென்ஸை போல செயல்படுகிறது, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்க ஒரு பெரிய ஆண்டெனாவை உருவகப்படுத்துகிறது.
இன்டர்ஃபெரோமெட்ரிக் நுட்பங்களை பயன்படுத்தி, நிசார் மிஷன் ஆனது காலப்போக்கில் ரேடார் படங்களை ஒப்பிட்டு, மேற்பரப்பு மாற்றங்களின் 3டி மாடல்களை உருவாக்குகிறது. இந்த மாடல்களால் (பெரும்பாலும் கண்களுக்கு தெரியாத) மெதுவான நிலச் சரிவு, நிலச்சரிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் அல்லது பனிப்பாறை பின்வாங்கல் போன்ற நுட்பமான மாற்றங்களை வெளிப்படுத்த முடியும்.
நிசார் மிஷனின் திறந்த தரவு கொள்கை (Open data policy) ஆனது நிசார் வழியாக கிடைக்கும் கண்டுபிடிப்புகள் ஆனது விஞ்ஞானிகள், அரசாங்கங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுக்கு இலவசமாக கிடைப்பதை உறுதி செய்கிறது. பயிர் சுழற்சிகளை கண்காணிப்பது முதல் புவியியல் ஆபத்துகளை முன்னறிவிப்பது வரை, அதன் தரவு உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும்.
நிசார் செயற்கைக்கோள் ஆனது ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியை மீண்டும் மீண்டும் பார்வையிடும்படி (அதாவது கண்காணிக்கும்படி) திட்டமிடப்பட்டுள்ளதால், விஞ்ஞானிகளுக்கு நிலையான செயல்பாட்டு நுண்ணறிவுகள் கிடைக்கும். இது காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு எதிராக மீள்தன்மையை உருவாக்க உதவும். விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு அப்பால், துருவ பனி இழப்பு, காடழிப்பு, ஈரநில சுகாதாரம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவற்றை கண்காணிப்பதிலும் நிசார் மிஷனின் தரவுகள் பயன்படுத்தப்படும்!