தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும் – நீதிப​தி​கள் கருத்து..!

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், ‘தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​கள் இன்​னும் முடித்து வைக்​கப்​பட​வில்​லை’ என்று குறிப்பிட்டு விசா​ரணையை நவம்​பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்​தனர்.

‘வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கையை பிற மாநிலங்​களில் தடுக்​கும் நோக்​கில் தவறான தகவல்​களை மனு​தா​ரர்​கள் தெரி​வித்து வரு​கின்​றனர்’ என்று தேர்​தல் ஆணை​யத்​தின்​ பதில்​ மனு​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.