10 நிமிடங்களில் வரும் பேராபத்து… சூரியனிலிருந்து வெடித்து சிதறிய சூரிய புயல்… பூமியை தாக்கும் அபாயம்… மொத்தமா போகப்போகுது.!

வாஷிங்டன்: சூரியனிலிருந்து வெடித்து கிளம்பிய சூரிய புயல் ஒன்று பூமியை தாக்க இருப்பதாகவும், இதனால் மின்வெட்டு முதல் ஜிபிஎஸ் வரை அனைத்து மின்சாதன பொருட்களும் பாதிப்பை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்த புலம் மாறும். இந்த மாற்றத்தின்போது சூரிய புயல் உருவாகும். இந்த புயல்கள் பூமிக்கு மிகவும் ஆபத்தானவையாகும்.

மே.14ம் தேதி இதுபோன்ற புயல் ஒன்று உருவாகியிருந்தது. இது மற்ற புயல்களை காட்டிலும் வலுவானதாக இருக்கிறது. இதற்கு X2.7 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு பறவையின் இறக்கையை போல இருப்பதால், பறவையின் இறக்கை என்றும் இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்த புயல் உருவான மே.14ம் தேதி அன்று ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்காலிக வானொலி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த துண்டிப்பு 10 நிமிடங்கள் வரை நீடித்திருக்கிறது.

சரி வெறும் 10 நிமிடங்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம்தான் இயக்கப்பட்டு வருகிறது. 10 நிமிடங்களுக்கு இந்த மின்சாதனங்கள் செயலிழந்தால், அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரம், ராக்கெட் ஏவுதல் போன்ற செயல்பாடுகளில் துல்லியம் முக்கியம். ராக்கெட் உடனான பூமியின் இணைப்பு 10 நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டால் நிச்சயம் அந்த ராக்கெட் ஏவுதல் தோல்வியில்தான் முடியும்.

இதைவிட ஆபத்தான விஷயம் விமான பயணங்கள்தான். விமானங்களில் ஜிபிஎஸ் கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விமானங்கள் எங்கு இருக்கின்றன? எங்கு போகவேண்டும்? அருகில் உள்ள விமானங்களுக்கான தொலைவு என்ன? எங்கே தரையிறங்க வேண்டும் உள்ளிட்டவை இந்த ஜிபிஎஸ் கருவிகளை நம்பிதான் இருக்கின்றன. இப்படி இருக்கையில், ஜிபிஎஸ் செயலிழந்தால் விமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான புயல்கள், செயற்கைக்கோள்களை பாதித்தால் அவை செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து நம் தலை மீது விழுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன. சூரிய புயல்களை A, B, C, M, மற்றும் X என விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். இதில் Aலிருந்து C வரை உள்ள புயல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதுபாட்டுக்கு வந்ததும் தெரியமால், போவதும் தெரியாமல் சென்றுவிடும். M வகை புயல்கள் மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கடைசியாக உள்ள X வகை புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

இதனை உணர்ந்துக்கொண்ட நாசா, சூரிய புயல்களை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார்நிலையில் இருக்கவும் விண்வெளி வானிலை அவசர பயிற்சியை நடத்தியுள்ளது. இந்த புயல்கள் பூமியின் காந்த மண்டலத்தை பாதிக்க கூடும் என்பதால் எதிர்காலத்தில் பூமி பேரழிவை சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.