திருவள்ளூர்: ஸ்ரீ பெருமந்தூர் காவல் நிலையத்தில் பயங்கர ரவுடி லிஸ்டில் உள்ள பிபிஜி சங்கர் கொலையில் இவனது பெயரை பொதுமக்களிடம் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் தலை தெரிக்க ஓடுவார்கள். இவன் கடந்த 13.4.2024 அ ன்று புட்லூர் பகுதியில் அவனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் இருந்து கத்திகள் டம்மி துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் மேற்கொண்ட புலன் விசாரணையில் இவர்கள் மற்றொரு குற்ற செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இது சம்பந்தமாக செவ்வாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் போது சாந்தகுமார் வயது 30 என்பவன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால் அவனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பே அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை செய்து வருகிறார். சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் அவனது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை மற்றும் குற்றவியல் நடுவர் அவர்களின் விசாரணை அறிக்கையும் வந்த பின் இவ்வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சாந்தகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாந்தகுமாரின் பிரேதத்தை பெற்றுக் கொண்டு அவன் சொந்த ஊரான ஸ்ரீ பெருமந்தூர் கச்சி பட்டுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்..
போலீஸ் விசாரணையில் மர்ம மரணமடைந்த பிரபல ரவுடியின் சடலம் ஸ்ரீ பெருமந்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.!
