வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளி
கோவை மாவட்டம் வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வால்பாறை பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அமுல் ராஜ், மைக்கேல்பாபு, சுரேஷ், ஜான்சன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்த நிலையில் அக்காமலை எஸ்டேட் சீனியர் மேலாளர் அருண் பிரசாத், உதவி மேலாளர் மில்டன், தேயிலை ஆலை மேலாளர் சந்தோஷ் பாபு, முதல் பிரிவு தலைமை நடத்துனர் ராமலிங்கம், மருந்தாளுனர் முருகேஷ் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில் தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து கோவை டெக்கான் டூல்ஸ் ஹலோசி குடும்பத்தினரின் சார்பாக அன்பின் விருந்து நடைபெற்றது வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் ஆலய பங்கு மக்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
