கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தங்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரில் வருபவர்கள் தைலக்காடு ,இந்திரா நகர் குமரன் ஹால், வள்ளியம்மை கோவில் அருகே தங்களது கார்களை நிறுத்த வேண்டும். இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.என்று போலீசார் அறிவித்துள்ளனர். மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்துக்கும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்..
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா.!!









