தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச ...