தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம் பொறுத்தவரை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ...