கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். ...




