கோவையில் 11 சப் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் – கமிஷனர் அதிரடி உத்தரவு..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி
போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர். பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சரவணம் பட்டிக்கும், காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ், சாய்பாபா காலனிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்..