21 இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்.!!

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 21 இன்ஸ்பெக்டர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:- சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும் ,வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆர். முத்துலட்சுமி பெரிய கடை வீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், சுந்தராபுரத்துக்கும், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் ஜி. முத்துலட்சுமி கரும்புக்கடை இன்ஸ்பெக்டராக வும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ,மாநகர குற்றப்பிரிவு – 2 க்கும் கே. சகிலா மாநகர குற்றப்பிரிவு – 1க்கும், கே ராஜசேகரன் சிங்காநல்லூர் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், எம் .ராஜசேகர் ரேஸ்கோர்ஸ் விசாரணை பிரிவுக்கும், டி. கண்ணன் குனியமுத்தூர் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..கே.பி. சாரதா வடவள்ளி இன்ஸ்பெக்டராகவும், மணிவண்ணன் பீளமேடு விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டரா கவும், பிரகாஷ் வெரைட்டி ஹால்ரோடு சட்டம்ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், விஜயேந்திரன் சிங்காநல்லூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ண லீலா உக்கடம் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வெங்கடேசன் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் கூடுதலாக காட்டூர் விசாரணை பிரிவுஇன்ஸ்பெக்டராகவும் பணியாற்றுவார். மாநகர குற்றப்பிரிவு-1.இன்ஸ்பெக்டர் வி. நிர்மலா போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும் (கிழக்கு) ஈரோட்டில் பணியாற்றிய பூரண சந்திர பாரதி மேற்கு மகளிர் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஏ .பிரபா மத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவுமசுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் குனியமுத்தூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கட்டுப்பாட்டுஅறை காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.