முதலைமைச்சர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல் – தலைநகரத்தில் பரபரப்பு.!!

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில் அவர் மக்களின் குறைகளை கேட்டு அது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்தது. இதன் பின்னர், அங்கு பெரும் குழப்பம் நிலவியதாக கூறப்படுகின்றது. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதன்கிழமை காலை முதல்வர் இல்லத்தில் பொது விசாரணை நடந்து கொண்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது ஒரு நபர், சத்தமாகக் கத்திக்கொண்டு வந்து, முதல்வரை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதில் முதல்வர் ரேகா குப்தா கடுமையாகத் தாக்கப்பட்டார். இது அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய குறைபாடாகக் கருதப்படுகிறது.

வாராந்திர பொது குறைகேட்பு நிகழ்வின் போது முதல்வர் ரேகா குப்தா மீது நடந்துள்ள இந்தத் தாக்குதலை டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, முதல்வர் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனரும் முதல்வர் இல்லத்தை அடைந்துள்ளார். டெல்லி போலீஸ் குழுக்கள் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றன. வடக்கு மாவட்ட துணை ஆணையர் உட்பட பல அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி உள்ளே நுழைந்தார், அவர் எப்படி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இவ்வளவு அருகில் சென்றார்? இந்தக் கேள்விகள் அனைத்தும் ஊழியர்களிடமும் கேட்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அவருக்கு எத்தனை காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகும். தாக்குதல் நடத்தியவரைக் காவலில் எடுத்த பிறகு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். ‘டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று அவர் பதிவிட்டுள்ளார். ஜனநாயகத்தில், எதிர்ப்புக்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நம்புகிறோம்.’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதலை டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கண்டித்துள்ளார். ‘இது மிகவும் வருத்தமளிக்கிறது. முதல்வர் முழு டெல்லியையும் வழிநடத்துகிறார், இதுபோன்ற சம்பவங்கள் எவ்வளவு கண்டிக்கப்பட்டாலும் அது குறைவாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஆனால் இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பின் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகிறது. டெல்லி முதல்வரே பாதுகாப்பாக இல்லை என்றால், ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன்கிழமை காலை ஜன் சுன்வாயி எனப்படும் மக்கள் குறைகேட்பு நிகழ்வின் போது இந்த தாக்குதல் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, முதல்வர் இல்லத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. அங்கு கூடியிருந்த மக்களும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பலர் தொலைதூரத்திலிருந்து முதல்வர் இல்லத்திற்கு தங்கள் பிரச்சினைகளுடன் வந்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் தீர்வு ஏதும் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருக்கும். இந்த சம்பவம் பொது மக்களையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.