வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு. கண்ணாடி உடைந்தது.

3 பேர் கைது.கோவை மே8 கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 – 30 மணிக்குகோவை வந்தடைகிறது. இந்த ரெயில் கடந்த 5 – ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை அருகே வந்து கொண்டிருந்தது. சிங்காநல்லூருக்கும் . பீளமேடுக்கும் இடையே வந்த போது திடீரென்று அந்த ரெயில் மீது கற்களை வீசப்பட்டன. இதனால் ரயிலில் கண்ணாடி உடைந்தது .ஆனால்பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அதில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.