போத்தனூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 25-ஆம் தேதி ஒரு ரயில் மீது கல் வீசப்பட்டது . இதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ரயில் மீது கல் வீசியதாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பின்னர் அந்த சிறுவன் அவனுடைய தாயருடன் சேர்ந்து கோவையில் உள்ள சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். சிறுவனின் மறுவாழ்வு மற்றும் படிப்புகளுக்காக கோவையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
ரயில் மீது கல் வீச்சு – 15 வயது சிறுவன் கைது..!
