சொத்தை பிரித்து கேட்டு தந்தையை இரும்பு தடியால் தாக்கி கொல்ல முயன்ற மகன் கைது.

கோவைமே 13 கோவை கிணத்துக்கடவுஅருகே உள்ள காட்டம்பட்டி, வடக்கு தோட்டம் சாலையைச் சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 70) விவசாயி. இவ ரது மகன் மயில்சாமி ( வயது 45) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தனது தந்தை கோபால்சாமியிடம் சொத்தை பிரித்து கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம் .இந்த நிலையில் நேற்று கோபால்சாமி வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோதையில் வந்த மயில்சாமி சொத்து பிரித்து கேட்டு தகராறு செய்தார். பின்னர் அவரை இரும்புத்தடியால் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.. இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மயில்சாமியை கைது செய்தார் .இவர் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.