தாயாரைகல்லால் தாக்கி ஜன்னல்கண்ணாடியை உடைத்த மகன் கைது.

கோவை மே 17கோவை குனியமுத்தூர் பி .கே . புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவரது மனைவி ஆஷிபா (வயது 42) இவர்களது மகன் சிகாபுதீன் (வயது 20) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை அவரது தாயார் ஆஷிபா கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிகாபுதீன் அங்கு கடந்த கல்லை எடுத்து வீட்டின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதை தட்டி கேட்டதாயார் ஆஷிபா வின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் வழக்கு பதிவு செய்து சிகாபுதீனை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்