டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுவை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பீகாரில் மேற்கொண்டது போல தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இதற்கிடையே, நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா என்று தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. மேற்கு வங்கத்திற்கு கால அளவு நீட்டிக்கப்பட்டது போல் தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்க கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.








