உரிய ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட வெள்ளி கட்டிகள், பணம் பறிமுதல்..!

கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம்,கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் பகுதியில் காவல் சோதனை சாவடிக்கு எதிரே நேற்று மதியம் 12.00 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி மற்றும் போலீஸ்காரர்கள் ஹரி,பாண்டிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்த்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் பெயர் 1.அஜயன் (45) S/o நகுலன் கட்டிப்புற ஹவுஸ், சென்னம்,திருச்சூர், முகமது வலியூதீன்.மகபூப் நகர் தெலுங்கானா என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் அதில 100 கிராம் அளவுள்ள 25 வெள்ளி கட்டிகள் (மொத்த எடை – 2 கிலோ 500 கிராம்) மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணமும் உரிய ரசீது இன்றி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர்கள் மற்றும் 2½ கிலோ வெள்ளியை தமிழ்நாடு வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.