கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நேற்று லங்கா கார்னர் ,பர்மா காரணி பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் ஒரு கிலோ 500 கிராம் எடைகொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள மர சிலம்பு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி ( வயது 30) காங்கேயம் பாளையம் ,பிரதீப் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை சிகரெட்டில் அடைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதிர்ச்சி!! மாணவர்களை குறி வைத்து கஞ்சா சிகரெட் விற்பனை – 2 பேர் கைது..!
