கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் எனும் தொற்றுப் பரவல், இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்தது.
தீவிர முயற்சிகளுக்கு பிறகு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியப்பட்டு, உலக மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னரே கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்தது.நவீன காலத்தில் இப்படியொரு நெருக்கடியை உலக மக்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை. இதுபோல பொதுமக்களை அச்சுறுத்திய கொரோனா வைரஸ், தற்போது சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது.இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனாஇந்தியாவிலும் கொரோனா மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளது.கேரளா, தமிழ்நாட்டில்.. நாட்டிலேயே அதிக அளவாக கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்று எண்ணிக்கை (69) பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (44) மற்றும் தமிழ்நாடு (34) உள்ளன. கர்நாடகா (8), குஜராத் (6), டெல்லி (3), ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் சிக்கிமில் தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இரண்டு பேர் பலி..இதனிடையே, மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மைனர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களின் மரணத்திற்கு கொரோனா மட்டுமே காரணமல்ல என்றும், அவர்களுக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.இதனையடுத்து, மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது..