களத்தில் குதித்த செங்கோட்டையன்… 100 பேர் அதிமுகவில் ஐக்கியம் – ஆடிப்போன திமுக.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் அரசியல் ஆட்டத்தை மீண்டும் தீவிரமாக தொடங்கி உள்ளார்.

நேற்று அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில், 100-க்கும் அதிகமான மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைத்தார்.

இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை மீண்டும் அதிமுகவுக்கான கோட்டையாக மாற்றும் முயற்சியின் ஒரு தொடக்கமே எனப் பார்க்கப்படுகிறது. “பாஜகவிற்கு செல்லப்போகிறார்” என்ற வதந்திகளுக்கும், “EPS-ஐ அதிருப்தியுடன் விலகியுள்ளார்” என்ற அரசியல் சூழ்ச்சிக்கும் செங்கோட்டையன் இந்த நிகழ்வின் மூலம் உரத்த பதில் அளித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவர் என்ற பதவியில் இருந்தாலும், செங்கோட்டையன் சமீபமாக கட்சியில் அதிகம் பிரகாசிக்கவில்லை என்பதாலேயே அவரைச் சுற்றியிருந்த வதந்திகள் பலம் பெற்றிருந்தன. ஆனால் தற்போது, இளைய தலைமுறை, வேட்பாளர்கள் மற்றும் கள அரசியலில் உள்ளவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதிமுகவின் வேரை மீண்டும் ஊன்றுவதற்கான திட்டத்துடன் செங்கோட்டையன் தன்னுடைய பாசறையை களத்தில் இறக்கி உள்ளார்.

இது EPS தலைமையின் கீழ் நடக்கும் மீளமைப்பு பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், வலிமையான ஈரோடு ஆதரவை அதிமுக கூட்டணிக்கு கொண்டுவந்துவிடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.