கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக் கிணறு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை சேர்ந்த முகமது சபரீஷ் ( வயது 23) பிரதீப் ராஜ் ( வயது 27) விவியன் ஆனந்தகுமார் ( வயது 25 )என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரிடம் இருந்து போதை மருந்து தடவப்பட்ட ஸ்டாம்புகள் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2020-ம்ஆண்டு நடைபெற்றது. கைதான 3 பேரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை பலருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை ஸ்டாம்புகள் விற்பனை – மூவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!!
