மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை – 2 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று குளத்துப்பாளையம், நேதாஜி நகர், செங்குளம் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா, 70 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மேல புதுவயலை சேர்ந்த உதயசங்கர் மகன் சஞ்சய் (வயது 20) ராமநாதபுரம் மாவட்டம்,குன்சம் குளம் போஸ் மகன் பிரவீன் ( வயது 21) என்பது தெரியவந்தது.விசாரணையில் இவர்கள் இருவரும் கோவை புதூரில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி -பள்ளி மாணவர்களுக்குஇந்த கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.