சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூவரும் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ தற்போது உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.
சமீபகாலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை விமர்சித்து வரும் நிலையில் அதிகமாக வரிவிதித்து வருகிறார். இதேபோன்று சீனாவுக்கும் அவர் அதிக வரி விதிக்கும் நிலையில் உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் போரை நிறுத்த வேண்டுமென அதிபர் புதினையும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இந்த நிலையில் அதிபர் புதின், சீனா அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், இணையத்தில் மிகவும் வைரலாகிறது.
இந்த புகைப்படம் உலக அளவில் மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக பேசப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் எனவும் 40 வருஷங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறினார்.