கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் .இவரது மகள் அகல்யா (வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மூச்சுத் திணறல் (சைன்ஸ்)இருந்து வந்தது . இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகல்யா நேற்று அவரது வீட்டின் குளியல் அறையில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் ரூபா தேவி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
பள்ளி ஆசிரியை தற்கொலை..









