சாவித்திரிதான் எங்க குடும்பத்தை கலைத்தார்: இது தான் நடந்தது- ஜெமினி கணேசன் மகள் பேட்டி.!!

மகாநடிகை படம் வெளியானபோது நடிகர் ஜெமினி கணேசன் மீது மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டது. அப்போது அவரது மகள் கமலா செல்வராஜ் ஒரு மனம் திறந்த பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பேட்டியில் இருந்து..

அப்பாவின் அழகு சினிமாவில் இருந்த அத்தனை பெண்களையும் ஈர்த்தது. அவர் அழகைப் பார்த்து மயங்காத பெண்களே கிடையாது. அப்படி மயங்கியவர் தான் சாவித்திரி. சாவித்திரி ரொம்ப பொசஷிவ், படிக்காதவர். அப்பா தான் அவருக்கு தமிழ், ஆங்கிலம், கார் ஓட்டுதல், குதிரையேற்றம் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர். அப்பாவுக்கு இளகிய மனசு. சாவித்திரியை அவர் சித்தப்பா வளர்த்துள்ளார் சித்தப்பா தொந்தரவு தாங்காமல் எங்க வீட்டுக்கு ஒருநாள் கொட்டும் மழையில் ஓடி வந்தார். அப்பா இரக்கப்பட்டு தாலி கட்டி அந்தஸ்து கொடுத்தார். நாங்கெல்லாம் வளர்ந்த குழந்தைகள். நாங்க ஸ்கூலுக்குப் போனப்பா, அப்பா சாவித்திரியை கல்யாணம் பண்ணிக்கிட்டாராமே என்று கேட்டார்கள். நாங்கள் தெரியாது என்று சொல்வோம்.

சாவித்திரிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது, ஆங்கிலம், குதிரை ஓட்ட, கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். அப்பா எந்தக் குடும்பத்தையும் கெடுத்ததில்லை. சாவித்திரி தான் எங்க குடும்பத்தை கலைத்தார். 30 வருடங்கள் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி என கொடிகட்டிப் பறந்தனர்.

எங்க பாட்டி ஒரு தெய்வம். அவர் சின்ன வயசுல கணவரை இழந்துவிட்டு துறவிபோல் வாழ்ந்தார். அவரோட ஆசியில் தான் நாங்க 4 பெண்களும் நல்லா இருக்கிறோம். அந்தப் பெண் பண்ண பூஜையால் தான் இன்று நன்றாக வாழ்கிறோம்.
15 வருடங்கள் அப்பாவை மிரட்டி அங்கேயே வைத்திருந்தார் சாவித்திரி. ஒருநாளும் இரவு அப்பா இங்கே தங்கியது இல்லை. பகலில் வருவார் சென்றுவிடுவார். அப்பா மேலே அம்மாவுக்கு கொள்ளை காதல்.

அந்தப் படத்தில் காட்டியதுபோல் அப்பா சாவித்திரியை தெருவில் விடவில்லை. சாவித்திரி மகள் தான் அவர் நடுத்தெருவில் நிற்கக் காரணம். கடன் தொல்லையால் பெங்களூருவில் கோமாவில் விழுந்தார். அப்புறம் சதீஷை வளர்த்ததே அம்மா தான். சாவித்திரியை நினைத்து நினைத்துதான் அப்பா குடித்தார். அப்பா சாவித்திரிக்கு குடிக்கச் சொல்லிக் கொடுக்கவில்லை. அகங்காரம், மண்டக்கர்வம் தான் சாவித்திரியின் அழிவுக்குக் காரணம். அப்பா என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.

ஆனா அப்பாவை அவரும் ரொம்ப காதலித்தார். அப்பாவை அப்படி கவனித்துக் கொள்வார். அப்புறம் சினிமாவில் காட்டினதுபோலத் தான் அவர் வீட்டில் பட்டுப்புடவைகளும், நகைகளும் இருக்கும். சாவித்திரி வீடு கட்டியபோது அப்பா வீட்டில் நீச்சல் குளம் கூடாது என்றார். ஆனால் அவர் ஹார்ட் ஷேப் ஸ்விம்மிங் பூல் கட்டினார். என் அம்மாவின் கண்ணீர் சாவித்திரிக்கு சாபமாக அமைந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.