தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பவர் விஜய் .இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு முழுமையாக இவர் அரசியலில் இறங்கவுள்ள நிலையில், இதுவே அவரின் கடைசி படமாகும். இப்படமானது சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது மறு ஆய்வு குழுவிற்கு இப்படம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான முடிவுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது இந்த 2026 மார்ச் 17ம் தேதிக்குள் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பட பிரச்சனைகளையும் கடந்து, பல்வேறு சிக்கல்களையும் விஜய் சந்தித்து வருகிறார்.

நேற்று தமிழ் பிரபல தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ் சுரேஷ் மற்றும் மீனாட்சி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா இருவருமே ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவருமே இணைந்து கலந்து கொண்டுள்ளனர். இதில் அவர்கள் இருவருமே ஒரே காரில் வந்து, ஒரே மாதிரியான நிறமுடைய ஆடையை அணிந்து கலந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இனையத்தல் வைரலாக பரவிவருகிறது. இதுவரை இவர்கள் இருவருமே எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் இணைந்து கலந்து கொண்டதில்லை என்ற நிலையில், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் சுரேஷ் அவர்களின் மகன் திருமணத்தில் இணைந்து கலந்துகொண்டுள்ளனர். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இருவருமே பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் இருவருமே இறுதியாக 2023ம் ஆண்டில் வெளியான லியோ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, எஸ்.எஸ்.லலித் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருமே நெருக்கமான காட்சிகளிலும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது என்பது குய்ப்பிடத்தக்கது. தற்போது விஜய் மற்றும் திரிஷா இருவருமே ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது அதைவிட ட்ரெண்டாக திருமண விழாவில் கலந்து கொண்டது பேசு பொருளாகி வருகிறது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







