ஆவடி : இப்போதெல்லாம் சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் பகுதிகளில் சொகுசாக வாழ்ந்து ஊரார் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றி விற்கலாம் என ஒரு கும்பல் அலையோ அலை எனத் திரிந்து ஒரு கும்பல் சொகுசு காரில் வலம் வருகிறது. அதை இப்போது பார்ப்போமா?
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் அப்பாவுவின் மனைவி ஷீலா வயது 60 என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் மானசரோவர் கிரஸ்ட் பகுதியில் வசிப்பதாகவும் நிலப் பிரச்சனை தீர்வு பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். தானும் தனது சகோதரரான கேரளாவில் வசித்து வரும் ஏவி பிலிப் ஜோசப் என்பவருடன் சேர்ந்து 1999ம் வருடம் அம்பத்தூர் பட்டர வாக்கம் ஞானமூர்த்தி நகர் பகுதியில் 5580 சதுர அடி கொண்ட இடத்தை இரண்டாக பிரித்து இருவருக்கும் 2790 சதுர அடி வீதம் கிரையம் பெற்று அனுபவத்தில் இருந்தது. ஏவி பிலிப் ஜோசப் என்பவர்,2022ம் ஆண்டு தனக்கு சொந்தமான 2790 சதுர அடி இடத்தை நில புரோக்கர் மூலமாக கோவிந்தராஜ் என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். அதன் அருகே உள்ள ஷீலாவின் இடத்தை கோவிந்தராஜுக்கு விற்பனை செய்த நில புரோக்கர் மூலம் போலியான ஆவணம் தயாரித்து விற்பனை செய்து உள்ளான்.22.3.24 ஆம் தேதி அவ்வழியே சென்ற ஷீலா வின் நண்பர் ஷீ லாவிற்கு சொந்தமான இடத்தில் அடையாளம் தெரியாத யாரோ காம்பவுண்ட் சுவர் கட்டி வருவதை பார்த்து தகவல் தெரிவித்துள்ளார். ஷீ லா சந்தேகம் அடைந்து அந்த இடத்திற்கு ஈசி போட்டு பார்த்ததில் போலியான ஆவணம் மூலம் விற்பனை செய்து உள்ளது தெரிய வந்தது. ஷீலா வைப் போன்று போலியான நபர் லீ லாவதி என்பவரைக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து கொ ன்னூர் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கோவிந்தராஜ் என்பவனுக்கு பத்திரப்பதிவு செய்து ரூபாய் 1 கோடி மதிப்புள்ள இடத்தை ஏமாற்றி உள்ளார்கள். இது சம்மந்தமான புகாரின் மீது நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து உள்ளார். ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தலை மறைவாக இருந்த குற்றவாளி லீலாவதி வயது 54. கணவர் பெயர் ரமேஷ். காந்திநகர். 4 வது தெரு. கொடுங்கையூர் சென்னை. என்ற கேடியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டாள்.
போலியான ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள மனைகள் விற்பனை – கேடி பெண் கைது.!!









