பனியில் புதையும் ரஷ்யா..!!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான “பனி.

ஓகோட்ஸ்க் கடலில் உருவான பல குறைந்தஅழுத்த மண்டலங்கள் ஒன்றிணைந்துஇந்த கடும் புயலை உருவாக்கியுள்ளன.கடந்த ஜன.15 முதல் பெய்துவரும் இடைவிடாத பனிப் பொழிவு, வெறும் 24 மணி நேரத்திற்குள் 39 மி.மீ அளவைத் தாண்டியுள்ளது. மணிக்கு 25-30 மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த கிழக்கத்திய காற்றினால், பனி மலை போலக் குவிந்து 4-வது மாடி வரை வீடுகளைச் சூழ்ந்துள்ளது.

வரலாறு காணாத இந்தப் பனிப்பொழிவால் கம்சட்காவின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன; மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய (Remote Work) அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து மற்றும் விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் ஆஃப்-ரோடு லாரிகள் மட்டுமே அவசர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பால், ரொட்டி போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கம்சட்கா பகுதிக்குத் தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, ஜன.26 வரை இந்நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே அங்குப் பயணம் மேற்கொண்டிருப்போர் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், காப்பீட்டு வசதிகளைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பனிப்பொழிவுக்குப் பெயர் போன கம்சட்காவிலேயே, இவ்வளவு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.