கோவை : அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் அதிவேகமாக சென்ற ஒரு கார் கோல்டு வின்ஸ் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருலாரி மீது மோதியதில் பெண் உள்பட 3 பேர் இறந்தனர் .இதை தொடர்ந்து மேம்பாலத்தில் வேகத்தடைகள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மேம்பாலத்தில் 6 இடங்களில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது .இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சமுத்திரகனி கூறியதாவது:-விபத்தை தடுக்கவும் வேகத்தை கட்டுப்படுத்தவும் கோல்டு வின்ஸ் இறங்குதளம், உப்பிலிப்பாளையம் இறங்கு தளம், அண்ணா சிலை, நவஇந்தியா, ஹோப், கல்லூரி ,விமான நிலையம் இறங்குதளம் ஆகிய பகுதிகளில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு விபத்துக்கள் நடைபெறுவது தடுக்கப்படும். கண்காணிப்பு கேமராக்களும் விரைவில் அமைக்கப்படும். மேம்பாலத்தில் வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவும் இறங்கு தளத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லவும் விதிமுறைவகுக்கப்பட்டுள்ளது. அவிநாசி ரோடு இறங்குதளத்திலும், உப்பிலிபாளையம் ரவுண்டான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது எல்.ஐ.சி. சந்திப்பில் புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியிலும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மேலும் போக்குவரத்து நெரிசல் குறையும் அவினாசி ரோடு மேம்பாலத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் போக்குவரத்து சீரைமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ரப்பர் வேகத்தடைகள்.!!
