காரில் ரூ.22 லட்சம் பறிமுதல் – தந்தை,மகன் கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை போலீஸ் சோதனை சாவடி அருகே போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் கோவையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரு 22 லட்சம் பணம் கட்டு ,கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக காரில் இருந்த கேரள மாநிலம் பாலக்காடு, கேரளசேரியை சேர்ந்த ராம்தாஸ் (வயது 47) அவரது மகன் அபிராஜ் (வயது 22)ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. விசாரணையில் இவர்கள் தந்தை .மகன் என்பதும் ,பாலக்காட்டில் கடந்த 18 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருவதாகவும், கோவை ராஜ வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் பழைய நகைகளை கொடுத்துவிட்டு இந்த பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறினார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.இதனால் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.