நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் இசக்கி பாண்டி .இவரும் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சஸ்மிதா லண்டனில் படித்து வந்தார். இந்த நிலையில் இசக்கி பாண்டியை திருமணம் செய்ய லண்டனிலிருந்து சமீதா நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் காதலர்கள் இருவரும் கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மேலும் தங்களது திருமணத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர் . ஆனால் பெண் வீட்டார் செல்வாக்கு அதிகம் உள்ளதால் போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பதாக மணமகன் வீட்டார் புகார் அளித்தனர். இதையடுத்து காதல ஜோடிகளை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்..
காதல் ஜோடிகள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்.!!





