மசாஜ் என்ற பெயரில் அழகிகள் வைத்து வாடகை வீட்டில் விபச்சாரம்..!

கோவைபுதூர்: காமாட்சி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் முருகன் (வயது 29) போத்தனூர் அண்ணாபுரம் சங்கீதா ( வயது 30 )அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாலிகா (வயது 25 )ஈரோடு சென்னிமலை சுகன்யா ( வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . ஸ்ரீ என்பவர் தப்பி ஓடி விட்டார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..