உலககோப்பை கால்பந்து போட்டியில் சாதனை.. கோல்டன் ஷூவை வென்ற பிரான்ஸ் வீரர் எம்பாபே.. மெஸ்ஸிக்கு தங்க கால்பந்து..!

த்தார் : 2022 ஆம் ஆண்டு ஃபிபா உலககோப்பை கால்பந்து தொடருக்கான தங்க காலணி விருதை பிரான்ஸ் வீரர் எம்பாபே வென்றார்.

இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் அர்ஜென்டின அணியே ஆதிக்கம் செலுத்தியது.

ஒரு கட்டத்தில் அர்ஜென்டின அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தனர்.

அப்போது தான் கெலியான் எம்பாப்பே தனது திறமையை காட்டினார். போட்டியின் 79வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி பிரான்ஸ் கோல் கணக்கை எம்பாபே தொடங்கினார். இதனை தொடர்ந்து அர்ஜென்டின வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் 81 வது நிமிடத்தில் எம்பாபே 2வது கோல் அடித்து, அர்ஜென்டினாவின் ஸ்கோரை சமன் செய்தார்.

 

இதே போன்று மெஸ்ஸி கோலால் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா கோல் மூன்றானது. எனினும் கெலியான் எம்பாப்பே போட்டியின் 118வது நிமிடத்தில் 3வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் 1966ஆம் ஆண்டுக்கு பிறகு, உலககோப்பை இறுதி போட்டியில் ஹாட்ரிட் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை எம்பாப்பே படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடப்பு உலககோப்பையில் மொத்தமாக 8 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்த வீரர்களுக்காக வழங்கப்படும் கோல்டன் ஷூ விருதை கெலியான் எம்பாப்பே படைத்தார். இதனையடுத்து 2வது இடத்தில் 7 கோல்களுடன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி நூழிலையில் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனைத் தொடர்ந்து 3வது இடத்தில் அர்ஜென்டினா வீரர் அல்வாரெஸ், பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஆகியோர் தலா 4 கோல்கள் அடித்திருந்தனர். போர்ச்சுக்கல் வீரர் ரோமஸ், ஸ்பெயின் வீரர் மொராட்டா ,இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா 3 கோல்களை அடித்தனர். சிறந்த கோல் கீப்பர் விருதை பைனலில் சிறப்பாக பெனால்டியை காப்பாற்றிய அர்ஜென்டின வீரர் மார்டினிஸ்க்கு வழங்கப்பட்டது. தங்க கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.