இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி நினைவு கால்பந்தாட்ட போட்டி

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணி பெரியபட்டிணம் முதல் பரிசை தட்டி சென்றது இரண்டாவது பரிசை ராமநாதபுரம் சேதுபதி அணியினர் தட்டிச் சென்றனர் மூன்றாவது பரிசை குப்பன் வலசையே சேர்ந்த அணியினர் தட்டி சென்றனர் பெரியபட்டிண அணிக்கு முதல்வர்கள் மற்றும் இராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி மற்றும் பாளையம்பட்டி ஜமீன்தார் அஸ்வின் ராஜா ஆகியோர் சுழல் கோப்பையை மற்றும் ரொக்க பரிசு வழங்கினர் இரண்டாவது அணி இராமநாதபுரம் சேதுபதி அணிக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது மூன்றாவது அணி குப்பன் வலசைக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது தொடர்ந்து மூன்றாவது முறையாக சுழல் கோபையை பெரியபட்டிண அணியினர் தட்டிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கால்பந்தாட்ட வீரர்கள் காப்ந்தாட்ட ரசிகர்கள் மற்றும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் கால்பந்தாட்ட குழு ஏற்பாடு செய்திருந்தது