ரயில்வே ஊழியர் தற்கொலை..

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . இது குறித்து அவரது மகன் முகேஷ் சந்துரு வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறார்கள்.