சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக போராட்டம் நடத்த உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தவெக நடத்தும் ஒவ்வொரு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திலும் தமிழக அரசு எஸ்ஓபி மூலமாக தங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் 3 கோரிக்கைகளை தவெக வலியுறுத்த உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.







