கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மணிஜோதி ( வயது 24) திருமுருகன் பூண்டியைச் சேர்ந்த நித்யா ( வயது 31 )போத்தனூர் ஷகீலா ( வயது 36) சேலம் இலக்கியா ( வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கவுண்டம்பாளையம் ரதி, பிரீத்தி, அபிநயா, ஞான்சி ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வீட்டில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் – 4 பெண்கள் கைது..!









