தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்…

பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (2026-2029) தேர்த்ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் (ஜி.கே. மணியின் மகன்) அபார வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை முதல் சென்னை அண்ணா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஷால், மாரி செல்வராஜ், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணித் திரையுலகினர் நேரில் வந்து வாக்களித்தனர்.வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழ்குமரன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாப்பதே தனது முதல் முன்னுரிமை எனத் தமிழ்குமரன் தனது வெற்றியைத் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.