கோவை செய்தியாளர்களுக்கு துணை ஜனாதிபதி வருகைக்கான அனுமதி பாஸ் வழங்குவதில் பி.ஆர்.ஓ. கெடுபிடி.!!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதில் கோவை மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அதிகாரி கெடுபிடியில் ஈடுபடுவது கோவை மாவட்ட செய்தியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒரு செய்தியாளர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட உள்ளக் குமுறல்கள் வருமாறு:- காவல்துறைக்கு புரோக்கர் வேலை பார்ப்பதுதான் கோவை மாவட்ட செய்தி தொடர்பு அலுவலரின் தலையாய கடமையாக உள்ளது.
செய்தியாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு பாஜகவை அனுகவும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் நிகழ்ச்சிகள், அமைச்சர் பெறுமக்களின் நிகழ்ச்சிகள் என்றால் திமுக நிர்வாகிகளை அனுகவும். மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகத்தையோ, அலுவலர்களையோ நம்பி ஏமாற வேண்டாம். மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகம் காவல்துறைக்கு புரோக்கர் வேலை செய்வதை மட்டுமே கடமையாக கொண்டுள்ளது. இவ்வாறு வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.