கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக மக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த பொறுப்பை மறந்து மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது. திமுகவில் அனைத்தும் ஒரு குடும்பத்தை சுற்றியே இருக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏ யாராக இருந்தாலும் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் தான் உள்ளது. தமிழ்நாட்டை ஒரு குடும்பத்திற்கான ஏடிஎம்மாக மாறியுள்ளது என்று விமர்சித்தார். இந்த மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் வேலை வழங்குவதாக கூறி பணம் வாங்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.
கிராமங்களில் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தை திமுக தாமதப்படுத்தியுள்ளது. மேலும், பெங்களூரு – சென்னை மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை முன்மொழியப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இன்று குற்றவாளிகள் அச்சமின்றி பெண்களுக்கு தீங்குவிளைவிக்கிறார்கள். என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோக நெட்வொர்க்கை பாதித்துள்ளது. இந்தியா ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை நம்புகிறோம். எந்த சூழ்நிலையிலும் இந்திய மக்களின் நலனையே மத்திய அரசு முதன்மையாக கருதும். யாரும் அச்சப்பட தேவையில்லை. வதந்திகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். என்றார்.








