பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றமான ‘கினசெட்’ (Knesset), பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’-ஐ வழங்கிச் சிறப்பித்துள்ளது. இந்த பதக்கத்தைப் பெறும் முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான மூலோபாய உறவுகளை (Strategic Relations) வலுப்படுத்துவதில் பிரதமரின் தனிப்பட்ட தலைமைத்துவமும், அர்ப்பணிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அரசியலில் மிகவும் சிக்கலான இரு துருவங்களாகக் கருதப்படும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்தும் உயரிய விருதுகளைப் பெற்ற உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த இஸ்ரேல் பயணம், வெறும் வர்த்தக ஒப்பந்தங்களுடன் நின்றுவிடாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.






