ஊடகவியளாளர்களுக்கான மருத்துவ முகாம்.CPC!

பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும், கால நேரமின்றி பணிபுரிபவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் இவர்கள், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு, கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஊடகவியளாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தியது.கோவை ஜி கே என் எம் மருத்துவமனையில் நடந்த 2 நாள் மருத்துவ முகாமினை, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஊடகவியலாளர்கள், அவர்களது உடல் நலனை பேணி பாதுகாக்கும் பொருட்டு ஏற்பாடு செய்த கோயம்புத்தூர் பிரஸ் கிளப் மற்றும் ஜி கே என் எம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ராகவேந்திரன் இந்த நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது வாழ்வியலில் பணிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதும், இரவு நேரத்தில் குறைந்தது ஆறு மணி நேரம் தூக்கம் என்பதை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

2 நாட்கள் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், ஊடகவியளாளர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு அளவு, இசிஜி எடுக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனைகளை சேவை அடிப்படையில் இலவசமாக வழங்கிய ஜி கே என் எம் மருத்துவமனைக்கு, ஊடகவியலாளர்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.