தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு போட்டியாக தற்போது தமிழக அரசு ரேஷன் அட்டைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி சேலை அரசு வழங்கியிருந்தது. ஆனால் சில வருடங்களாக வழங்கி வந்த ரொக்கம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் இது குறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் பொங்கல் பரிசுத்த வகுப்பு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது







