தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக விஜயை பார்க்க ஏர்போர்ட்டில் அதிக கூட்டம் குவிந்தது. பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு அவர் பிரச்சார வாகனத்தில் சென்ற நிலையில் கொடைக்கானலிலும் மக்கள் அவருடைய வாகனத்தை சுற்றி வளைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நடிகர் விஜய் அவர்களை பார்த்து கையசைத்தவாறு சென்ற நிலையில் பாதுகாவலர்கள் அங்கிருந்து விலகும்படி பொதுமக்களிடம் கூறினார்கள். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் காவலராக கதிரவன் மார்க்ஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். இவருக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில் சித்திரை தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்த சூழலில் அவர் எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக்கொண்டு விஜயை பார்க்க சென்று விட்டார். இதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..